சிக்கலில் மாட்டிய விஜய். சுதாரித்துக் கொண்ட அஜித்!

vedhalam
சமீபத்தில், நடிகர் விஜய் படத்தைப் பற்றிய தன் விமர்சனத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார் பத்திரிகையாளர் தன்யா.

அதையடுத்து விஜய் ரசிகர்கள் தன்யாவை சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் தாக்கினார்கள். தன்யா காவல்துறையில் புகார் கொடுத்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கையும் பாய்ந்தது.
பிரச்னை பெரிதாகும் போலிருந்ததால் விஜய், தன் ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, படத்தை விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது என்கிற ரீதியில் அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அந்த பரபரப்பே முழுமையாக அடங்காத சூழலில் நேற்று நடிகர் அஜித் சார்பாக அஜித்தின் சட்ட ஆலோசகரிடமிருந்து ஒரு அறிக்கை வந்துள்ளது. அதில், எனது கட்சிக்காரர் அஜித்துக்கு ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எந்த கணக்கும் இல்லை. அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிலர் அவர்களது தனிப்பட்ட கருத்தை பரப்பி வருகின்றனர்.

எனது கட்சிக்காரர் எந்த ஒரு வணிக சின்னம், பொருள், அமைப்பு எதற்கும் விளம்பர தூதர் இல்லை. அவர் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ, சமூக வலைதளங்களையோ ஆதரிக்கவில்லை. மேலும் சமூக, அரசியல் மற்றும் தன் சார்பாக தனிப்பட்ட கருத்தை வெளியிட யாரையும் அனுமதிக்கவில்லை.

அஜித் எந்த ஒரு கருத்தையும் தெரிவிப்பது இல்லை. சமூக வலைதளங்களில் அஜித் பெயர் மற்றும் புகைப்படத்துடன் பரவும் கருத்துகள் அனைத்தும் பொய்யானவை.
-அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளத்தில் விஜய்க்கு சிக்கல் வந்து அறிக்கை மூலம் சமாளித்தார். அஜித் தனக்கு சிக்கல் வரும்முன்பே சுதாரித்துக் கொண்டிருக்கிறார்!

Leave a Response