சசிகலா ஆலோசனைப்படி ஆபரேசன் நிச்சயம் நடக்கும்! தினகரன் சூசக தகவல்

ttv-dinakaran-pti

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் தினகரன் அளித்த பேட்டி:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நீதி விசாரணை மூலம் சசிகலா மீதான அவப்பெயர் நீங்கும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

ஓ.பி.எஸ்.ஐ அமைச்சர்கள் சந்திப்பதில் தவறு இல்லை. தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிகள் இணைவது ஒன்று. ஆனால், சிலர் தங்களது பதவியை காப்பாற்ற சுயநலத்தால் இணைப்பு நடந்தாலும், அது நீடிக்குமா என்பது சந்தேகம்.நான், சசிகலாவின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தேன். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடந்தால் தான், பல்வேறு தரப்பினர் வைக்கும் புகார்களுக்கு விடை கிடைக்கும், அதுமட்டுமின்றி சசிகலா குற்றமற்றவர் என்பது வெளிப்படும்.

ஜெயலலிதா வீட்டை அரசு இல்லமாக மாற்றுவது தவறில்லை. ஆனால், அது அவசர கதியில் இருக்க கூடாது. சட்ட ரீதியாக அணுக வேண்டும். தொண்டர்களின் பொது மக்களின் கோரிக்கை ஏற்ப இருக்க வேண்டும். இது குறித்து ஜெ. உயில் எழுதி வைத்துள்ளாரா, என தெரியவில்லை.

இது அவசரத்தில் சுயநலத்திற்காக செயல்படும் போது சரியாக அமையாது. நினைவிடமாக மாற்றுவது குறித்து அரசு சரியாக அணுக வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

சசியிடம் ஆலோசனை பெற்று செல்கிறேன். நிச்சயம் ஆபரேசன் இருக்கும். அதனை நீங்கள் பார்க்கலாம்.

மேலூர் கூட்டத்திற்கு எம்எல்ஏக்கள் வந்தனர். இ.பி.எஸ். அணியில் சிலர் ஸ்லீப்பர் செல்களாக இருக்கின்றனர் தேவைப்படும் போது அவர்கள் வெளிவருவார்கள்.

முதல்வர் அறிவிப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response