பக்திக்கு முதல் தகுதி எது? -தினம் ஒரு ஆன்மிகச் செய்தி

TEMPLE 3

ஒரு சமயம் மேலே பறந்த பறவையைப் பார்த்த கண்ணன் அர்ஜுனனிடம், ’’மைத்துனா! அது புறா தானே” என்றார்.

அர்ஜுனனும் “ஆம்” என்றான்.

“இல்லையில்லை….கழுகு மாதிரி தெரிகிறது” என்றார் கண்ணன்.

“ரொம்ப சரி. அது கழுகே தான்” என்றான் அர்ஜுனன்.

“அர்ஜுனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை” என்றதும், “அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான்” என்று மூன்று முறை அடித்துச் சொன்னான்.

TEMPLE2

“என்னடா நீ! நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே…! அது என்ன பறவை என தெளிவாகச் சொல்” என்ற கண்ணனிடம், “கண்ணா! என் பார்வையை விட உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை அதிகம். மேலும், அந்தப் பறவையை நான் ‘புறா’ என்று சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப் பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே…! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன்” என்றான்.

பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்!

Leave a Response