அமலாக்கப்பிரிவு சாட்சிகளையும் பேரம் பேசிவிட்டாரா சசிகலா? எழுகிறது சந்தேகம்??

sasikala-natarajan

சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி ஜாகீர் உசேன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்பின்னர் இந்த வழக்கில் மத்திய அமலாக்கப்பிரிவு தரப்பின் சாட்சிகளை சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றார். அமலாக்கப்பிரிவு சாட்சிகள் யாரும் ஆஜராகாததால், விசாரணையை வருகிற 29’ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஜாகீர் உசேன் உத்திரவிட்டுள்ளார்.

பெங்களூரு சிறைச்சாலையில் லஞ்சம் கொடுத்து சசிகலா வசதிகளை பெற்று கொண்டதை போல் இங்கும் பணம் கொடுத்து சாட்சிகளை சரி செய்து விட்டாரோ சசிகலா என பொது மக்களிடையே சந்தேகங்கள் எழுகின்றன.

Leave a Response