“Pathetic” Path of Lollu dhadha:

“லொள்ளு தாதா” திரையை தொட போராடிய கதை:

நடிகர் மன்சூர் அலிகான் தயாரிச்ச “லொள்ளு தாதா” படம் முடிந்து பல மாதங்களாகிறது. தீபாவளி ரிலீஸ் என விளம்பரபடுத்தினார், தியேட்டர் கிடைக்கததால் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. ரிலீசுக்காக அவரும் தியேட்டர் தியேட்டரா போன் பண்ணிகிட்டிருக்கார். யாரும் கண்டுக்கலையாம்.

கோபப்பட்ட நடிகர் தன்னுடைய வயித்தெரிச்சல பப்ளிக்கா வெளிப்படுத்துனார். அதுக்கும் பலனில்லாததால் இப்பவேற முடிவு எடுக்கப்போறதா சொல்றாராம். தியேட்டர் கொடுக்கலன்னா கமல் பாணியில் DTH-ல் ஒளிபரப்புவேன் என எச்சரித்தார். அதற்கும் நோ ரெஸ்பான்ஸ்.

பின்னர் சேட்டிலைட்லருந்து ஸ்டிரைட்டா சின்னத்திரைல ஒளிபரப்பிடுவேனு பயமுறுத்துனாராம். ஆனா இந்த மிரட்டலுக்கும் யாரும் செவி சாய்க்கலையாம். அடுத்ததா பீச்சுல ஸ்கிரீன வச்சி பப்ளிக்கா டிக்கெட் வித்து படம் காட்டுறதுபத்தி யோசிச்சிட்டு இருந்த சமயத்துல கும்பலா பத்து படங்கள் வர்றதை கேள்விப்பட்டு தானும் வெளியிட முடிவு செய்துள்ளார் மன்சூர் அலிகான்.

இந்த வாரம் வெளியாக உள்ள 10 சின்ன பட்ஜெட் படங்களில் தனது “லொள்ளு தாதா” படம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாராம் மன்சூர் அலிகான்.