சுதந்திர தினத்தை இயற்கை விழிப்புணர்வு விழாவாக மாற்றிய பள்ளி!

VANAVAN (3)

பெயருக்கு கொடியேற்றினோம், சாக்லேட் கொடுத்தோம் என கடந்து போகாமல் சில பள்ளிகள் தனித்துவமாக சுதந்திர தினத்தை கொண்டாடுவது வழக்கம்!

அந்த வகையில், சென்னை மேற்குத் தாம்பரம் ரமணா வித்தியாலயா ஆங்கிலப்பள்ளி ’சென்னை தற்சார்பு மாடித்தோட்டம்’ என்ற அமைப்புடன் சேர்ந்து முழுக்க முழுக்க இயற்கையான முறையில் நேற்றைய சுதந்திர தினத்தை கொண்டாடியது.

விழாத் துளிகள்:

* நிகழ்வில் கலந்துகொண்ட இயற்கை ஆர்வலர் ‘நாட்டு விதை’ வானவன் தேசியக் கொடியை ஏற்றினார்! திருமண விழாக்களில், பள்ளிக் கல்லூரி நிகழ்வுகளில் என மக்கள் கூடுமிடங்களில் இலவசமாக நாட்டு விதைகளை விநியோகித்து, விழிப்புணர்வு உரை நிகழ்த்தி வருபவர் இவர்!

VANAVAN (7)

* மாணவ மாணவிகளுக்கு சாக்லேட் போன்ற இனிப்புகள் வழங்குவதற்கு பதிலாக ஆயிரம் மூலிகைச்செடிகளும், நாட்டுக்காய்கறி விதைகள அடங்கிய 300 பொட்டலங்களும் வழங்கப்பட்டன!

* ஆசிரியர்கள் பச்சை வண்ண சீருடையில் வந்திருந்தினர்!

* படித்துவிட்டு வெளிநாடு சென்று, தாயகமான தமிழகத்துக்கு திரும்பும் பெண், தன் தோழிகளோடு கிராமத்துக்கு செல்கிறாள். அங்கு நடக்கும் கிராமியக்கலையான தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், அதோடு உழுது, விதைத்து, அறுவடைசெய்து, உரல் உலக்கை கொண்டு நெல்லை அரிசியாக்குவது வரை பார்த்து ரசிக்கிறாள்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அருமையாக நடித்துக் காட்டிய நாடகத்தின் கருச்சுருக்கம்தான் மேலேயிருப்பது.

நாடகத்தின் இடையிடையே திடக்கழிவுமேலாண்மை, மாடித்தோட்டம் அமைத்தல், தோட்டப் பராமரிப்புக்கான இயற்கை முறை இடுபொருட்கள் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு உள்ளிட்ட செயல் முறை விளக்கங்களும் இடம்பெற்றன.
VANAVAN (1)

* இயற்கை ஆர்வலர் மாரிமுத்து ’திடக்கழிவு மேலாண்மை’ குறித்து எளிமையாகவும் இனிமையாகவும் செயல்முறைவிளக்கம் தந்ததும் பயனுள்ளதாக இருந்தது!

*பள்ளி நிர்வாகிகள் செல்வமணி, சந்திரா இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்!

*கிராமத்தில் இருக்கும் பள்ளிகளிலேயே இவ்விதமான கொண்டாட்டங்கள் இடம்பெறுவதாக தெரியவில்லை. அப்படியிருக்க சென்னையிலுள்ள ஒரு பள்ளியில் இயற்கை விழிப்புணர்வு நிகழ்வாக சுதந்திர தினத்தை கொண்டாடியிருப்பதற்கு வாழ்த்துகள்!

1 Comment

  1. தன்னலமில்லாமல் பல பச்சைக் கொடிகளை ஏற்றி விட்டதால் இன்று மூவர்ணக் கொடி தங்கள் கைகளுக்கு வசப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்??????

Leave a Response