அல்சரைக் குணப்படுத்தும் செம்பருத்திப் பூ!

செம்பருத்தி1

செம்பருத்திப் பூவின் மருத்துவ குணங்கள்

1. செம்பருத்தி பூ உலர்த்திய சூரணத்துடன் முருங்கைப்பூ உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

2. அல்சர் என்கிற வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

3. செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும். வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
semparuththi 2

4. செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

5. செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

6. செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

தகவல்: சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா

Leave a Response