பணிச்சுமையினால் போலீஸார் மரணம்! அரசாங்கம் என்ன செய்யப் போகிறது ?

pinam
தமிழகத்தில் காவல் துறையினர் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் இரவு ரோந்து உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, காவலர்களுக்கு தினமும் 16 மணிநேரம் வரை வேலை வழங்கப்படுகிறது. மேலும், விடுமுறை கூட இல்லாமல் பணியாற்றுவதால் காவலர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், நேற்றைக்கு மட்டும் தமிழகம் முழுவதும் 4 காவலர்கள் பணிச்சுமையால் தங்களது உடல்நலத்தை கவனிக்க முடியாமல் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை அண்ணா நகர் குற்றப்பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் விவேகானந்தன் பணிச்சுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிகமாகி மரணமடைந்தார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் தேவி உடல்நலம் சரியில்லாத நிலையில் விடுப்பு எடுக்க முடியாததால் பணிக்கு வந்துள்ளார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

திருச்சி ஆயுதப்படை காவலர் லியோ ஜோசப் பணிச்சுமை காரணமாக உடலை பரிசோதிக்காமல் விட்டதால் மாரடைப்பால் மரணமடைந்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் பணியாற்றி கடந்த 12 நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் தினகரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

Leave a Response