சமூகவலைத்தளத்தில் ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண்ணை போலீஸார் தேடல்

list_feature
சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆண்களை மிரட்டி பணம் பறித்து வந்த பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை மைலாப்பூரில் வசித்து வரும் மஞ்சுளா வேணு கோபால் என்ற 40 வயது பெண் சமூக வலைத்தளம் மூலம் தொழிலதிபர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்களை ஏமாற்றி நட்பு வலைக்குள் சிக்க வைத்து பின் நேரில் சந்தித்து அவர்களுடன் செல்பி எடுத்து கொள்வார்.

அந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் மஞ்சுளா ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மைலாப்பூரை சேர்ந்த சதீஸ் குமார் என்ற தொழிலதிபர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Leave a Response