பட்டைய கிளப்பும் திருவிழாவுடன் ‘சண்டக்கோழி 2’

sandakozhi
லிங்குசாமி இயக்கத்தில், விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான படம் ‘சண்டக்கோழி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மினுக்குப் பதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலில், திருவிழாக் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. எனவே, விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உள்ளிட்ட அனைவருமே முதல் ஷெட்யூலில் பங்குபெற இருக்கிறார்கள். முதல் பாகத்தைப் போலவே தந்தை – மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

Leave a Response