மகேஷ் பாபு நடிக்கும் ’ஸ்பைடர்’ படத்தின் டீசர் இன்று வெளியானது

spy
தமிழில் சினிமாவில் வெற்றிப்பட இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதற்கு ‘ஸ்பைடர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் மகேஷ் பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் கிளிம்ஸ் ஆப் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து டீசர் மற்றும் டிரைலருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ’ஸ்பைடர்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=Rt-GWQuys4k
மகேஷ் பாபு ஸ்டைலான ஹீரோவாகவும், எஸ்.ஜே.சூர்யா மிரட்டல் வில்லனாகவும் நடித்துள்ளது தெரிகிறது. இப்படத்தின் ரிலீசிற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Response