கியாஸ்சிலிண்டருக்கான மானியம் ரத்து கிடையாது…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு !

gas-lpg3-600-03-1499054344
வீட்டுப்பயன்பாட்டுக்காக ஏழை மக்கள் பயன்படுத்தும் சமையல் கியாஸ்சிலிண்டருக்கான மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.

இது குறித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

வீட்டுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் மண்எண்ணெய்கான மானியம் தொடர்ந்து ஏழை மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க, வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து திருபுராவுக்கு பைப் அமைத்து எரிவாயு கொண்டுவரப்படும். வங்காளதேசத்தின் பர்வாதிபூரில் இருந்து மேற்கு வங்காளத்தின் சிலிகுரிக்கு டீசலை பைப் மூலம் கொண்டு வருகிறோம். அந்த எண்ணெய் அசாமில் இருந்து சிலிகுரிக்கு பைப்களில் கொண்டு செல்லப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response