பரபர விறுவிறு போலீஸ் கதை எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் ‘மாயவன் ‘

Maayavan

‘மாநகரம்’ வெற்றி படத்தை தொடர்ந்து சந்திப் கிஷன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘மாயவன்’.
பல வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய சி.வி. குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். தன்னுடைய ‘திருக்குமரன் என்டர்டைன்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார் சிவி. குமார்

படத்தில் சந்திப் கிஷன்க்கு ஜோடியாக லாவண்யா த்ரிபாதி நடித்திருக்கிறார்.

maayavan (1)

போலீஸ் அதிகாரி ஒருவருடைய வாழ்க்கை பின்னணியில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்களை கொண்ட கதையாம் இது. மாயவன் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபும் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், இப் படத்தின் ஒளிப்பதிவு கோபி அமர்நாத் கவனித்துள்ளார்.

இப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

மாயவன் படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 4ஜி படத்தை தயாரித்து வருகிறார் சிவி. குமார்.

Leave a Response