வெங்காயம் கிலோ 17 ரூபாய் ?

venkayam
கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுவதை தடுப்பதற்காக, ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.17 க்கு மட்டுமே விற்பனை செய்ய ஒடிசா அரசு, வியாபாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு கூறிய விலையை விட கூடுதலா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. பதுக்கலை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தவும் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒடிசாவிற்கு வெங்காய வரத்து குறைந்தது. இதனை பயன்படுத்தி சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். இதனையடுத்து அம்மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Response