தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஸ்ட்ரைக் வாபஸ் நாளைமுதல் படப்பிடிப்பு துவங்குகிறது !

thuppu
மூன்றாவது நாளாக தொடர்ந்த பெப்சி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாளை(ஆக., 4) முதல் படப்பிடிப்பு செல்ல முடிவு எடுத்திருப்பதாக தலைவர் செல்வமணி அறிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை ஸ்டிரைக்கிற்கு வழிவகுத்தது. கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

இதனால் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 40 சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. இருவரும் சமாதானமாக செல்லும் படி நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் பெப்சி நிர்வாகிகளின் அவசரக்கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வமணி. ரஜினி, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட சொல்லி வலியுறுத்தினர். பல படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவலை தெரிவித்தனர். நாளை தொழிலாளர்கள் நல ஆணையத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொள்ள சம்மதம் சொல்லி உள்ளனர். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு 23 சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவது என்றும், நாளை முதல் படப்பிடிக்கு செல்லவும் முடிவு செய்துள்ளோம் எனவும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

Leave a Response