பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஓவியா !

oviyaa
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஓவியா. அவருக்காகவே பல இளைஞர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். ஆனால், ஜூலி மற்றும் சிலரின் நடவடிக்கைகள் ஏற்கனவே ஓவியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதை அவரது பேச்சில் பார்க்க முடிகிறது. மேலும், தன்னுடைய உடல் நிலை சரியில்லை எனக் கூறி, தன்னை வெளியேற்றும் படி அவர் தொடர்ந்து கூறிவருவதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் வெளியேறினால் அந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம் என ஏராளமான ரசிகர்கள் கூறிவருகின்றனர். எனவே, அவருக்கு பதிலாகவே பிந்து மாதவியை கொண்டு வந்துள்ளார்கள் எனவும் சிலர் கூறுகின்றனர்.

ஓவியா வெளியேறுவாரா? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Response