⁠⁠⁠லண்டனில் சைக்கிள் ஓட்டும் ஆர்யா!

aarya

பிட்னஸ் விஷயத்தில் ஆர்யா எப்போதுமே தனி கவனம் செலுத்துவது வழக்கம். நடிப்பு, படத் தயாரிப்பு, ஹோட்டல் பிஸினஸ் என பல வேலைகளில் பிஸியாகா இருந்தாலும் பிட்னஸ் விஷயத்தில் மனிதர் நோ காம்ப்ரமைஸ்!

பிட்னஸ் விஷயத்தில் எத்தனையோ உபகரணங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ஆர்யா அதிகம் விரும்புவது சைக்கிளிங்!

சென்னையில் இருக்கிற நாட்களில் அவர் வீடு இருக்கிற அண்ணாநகரில் இருந்து நண்பர்களுடன் கிளம்பி ஈ.சி.ஆர். சாலையில் வரை ரவுண்ட் அடித்து திரும்புவது வழக்கம்! ஆர்யாவின் உடல் திடகாத்திரமாக இருப்பதற்கு சைக்கிள் ஓட்டுவதும் முக்கிய காரணமாக இருக்கிறது!

இதுவரை பிட்னஸுக்காக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த ஆர்யா, இப்போது லண்டனில் நடைபெறும் ‘எடின்பர்க் லண்டன் 2017’ சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ள ஆயத்தமானார். 1450 கிலோமீட்டர்களை சைக்கிள் ஓட்டிக் கடக்க வேண்டும் என்பது டாஸ்க்!

aaryagroup

ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ஆர்யாவுக்கு ஸ்பான்சர் செய்கிறது. இது பற்றி, தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், ரஜினி மற்றும் அக்‌ஷய் குமாருக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள ஆர்யா, ‘2.0’ பட விளம்பரம் பிரிண்ட் செய்யப்பட்ட டிஷர்ட் அணிந்த போட்டோவையும் இணைத்திருந்தார்!

Leave a Response