‘சதுர அடி 3500’ ஆடியோ ரிலீஸில் சூப்பர் ஸ்டாரை வம்புக்கிழுத்த பாக்யராஜ்!

sathura ati

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

ரியல் எஸ்டேட் பின்னணியில் சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி, ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் என எல்லா அம்சங்களும் கலந்து உருவாக்கப்பட்ட கமர்சியல் எண்டர்டெயினர் தான் இந்த சதுர அடி 3500. ஏராளமான திருப்பங்களுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக தயாராகியிருக்கிறது.

இப் படத்தில் நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி, படத்தின் விநியோகஸ்தர் ராகுல், கலைப்புலி எஸ் தாணு, கே பாக்யராஜ், கவிஞர் பிறைசூடன், இயக்குநரும் நடிகருமான ஈ ராம்தாஸ், தயாரிப்பாளரும் நடிகருமான கே ராஜன், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர், நடிகரும், வழக்கறிஞருமான சங்கர் கிருஷ்ணமூர்த்தி, எடிட்டர் சுபாஷ், இயக்குநர் ஷர்மா, இயக்குநர் மோகன், கவிஞர் சொற்கோ, நடிகர் அபி சரவணன், நடிகர் வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக விழாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் அவர்களின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை அபி சரவணன், கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், “வளரும் போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராகவேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விசயத்தில் நடந்தால் சந்தோஷம்” என்று பாராட்டி பேசினார்.

அபி சரவணனை பாராட்ட வேண்டியது அவசியம்தான். அதற்காக அவரை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசியதன் மூலம் உதவி செய்ய முடிந்தவர்கள் எதுவும் செய்வதில்லை’ என்பதை பாக்கியராஜ் மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசியதாகவே தெரிகிறது!

அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக சதுர அடி 3500 உருவாகியிருக்கிறது’ என்றார்.

Leave a Response