இதுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பா !

Tomato-01
தற்போது தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை சமீபகாலமாக கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதில், தக்காளியின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தக்காளி தற்போது கிலோ ரூ. 100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால், பலதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த 20ம் தேதி, இந்தூர் மார்க்கெட்டில் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 300 கிலோ தக்காளி மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஒவ்வொரு தக்காளி வேனிற்கும், 5க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், கடந்த 15ம் தேதி, மும்பை மார்க்கெட்டில் 2,600 கிலோ தக்காளி இருந்த டிரக்கை மர்மநபர்கள் கடத்திச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Response