விஜய் சேதுபதி உடன் இணையும் கவுதம் கார்த்திக் !

gouth
“நடுவுல கொஞ்சம் பாகத்தை காணோம”படம் மூலம் ரசிகர்களிடம் மிக பிரபலமானவர் காயத்ரி. மிக திறமையான நடிகை என போற்றப் படும் இவர் இப்பொழுது தொடர் வெற்றிகளால் உச்சத்தை தொட்டு இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். “காயத்ரி மிக சிறந்த நடிகை. அவரது திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் அவருக்கு கிட்டவில்லை என்பதுதான் என் கருத்து. “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” அவருக்கு ஒரு ராசியான படமாக அமையும். இந்தக் கதாபாத்திரம் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்கும்.” என்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார்.

அம்மே நாராயணா productions மற்றும் ‘7 C’ என்டர்ர்டைன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் பிரதான வேடத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக். ரங்கூன், இவன் தந்திரன் ஆகிய படங்களுக்கு பிறகு இவரது படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடி இருப்பது குறிப்பிட தக்கது. ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்க, ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய துரித வேகத்தில் தயாராகும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்துக்கு இப்போதே திரை உலக வர்த்தகத்தினர் இடையே ஏகப்பட்ட வரவேற்ப்பு.

Leave a Response