‘மாரி-2’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்!

dhanus

சவுந்தர்யா ராஜேஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் வருகிற ஜுலை 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்திலும், ‘ஃபகீர்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். அது மற்றும் இன்றி கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘மாரி-2′ படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். `மாரி’ படத்தின் முதல் பாகம் ரிலீசாகி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த அறிவிப்பை பாலாஜி மோகன் வெளியிட்டிருக்கிறார்.

mari

Leave a Response