இந்திய ரயில்வே அறிமுகம் படுத்திய சோலாரில் இயங்கும் முதல் ரயில் பெட்டி!

solar
சோலாரை பயன்படுத்தி இயங்கும் ரெயில் பெட்டிகளை டில்லியில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்திருக்கிறது. அதிக பண செலவு, காற்று மாசுபடுதல் ஆகியவற்றை குறைக்கவும், டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டை பெருமளவில் குறைக்கும் வகையிலும் சோலார் ரயில் பெட்டிகள் கொண்ட சோலார் ரயிலை இந்திய ரயில்வே இன்று(ஜூலை-14) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சோலார் ரெயில் பெட்டிகள் கொண்ட ரயில் சேவையானது, முதன்முறையாக டில்லியின் சராய் ரோஹில்லா – ஹரியானாவின் பருக் நகரிடையே இயக்கப்பட உள்ளது. இதில் 6 ரயில் பெட்டிகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.54 லட்சமாகும். இந்தியாவின் முதல் சோலார் ரயிலான இந்த பயணிகள் ரயிலில் தயாராகும் மின்சாரம், இந்த ரயிலின் உள்ளே உள்ள மின்விளக்குகள் மற்றும் உட்புற மின்சார உபகரணங்களை பயன்படுத்த உதவும். முழுமையாக சார்ஜ் செய்தோம் என்றால், 72 மணி நேரம் வரை பயன்படுத்தும் திறன்கொண்ட பேட்டரிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.இந்த சோலார் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
solaar

Leave a Response