நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் முதல் லேப்டாப்!

tuj
டெல் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் பார்க்க மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டேப்லெட் மற்றும் கழற்றக் கூடிய கீபோர்டு கொண்டுள்ள புதிய லேப்டாப் 13-இன்ச் டிஸ்ப்ளே 2880×1920 பிக்சல் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

டெல் 2-இன்-1 மாடல் இன்டெல் கோர் i5 பிராசஸர் 128 ஜிபி மெமரி மற்றும் i7 பிராசஸர் 256 ஜிபி மெமரியும் 8 அல்லது 16 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

டெல் 7285 லேடிட்டியூட் நோட்புக் விலை 1199 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.78,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கீபோர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் மேட் 549.99 டாரல்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,439 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Response