1 கிலோ தக்காளி 100 ரூபாய் ?

tometto
ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிக்கு பெங்களூருவில் இருந்து “ஹைபிரீடு” வகை தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது, தக்காளி வரத்து குறைந்துள்ளது. வறட்சி காரணமாக தமிழகத்திலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. தேனி மாவட்டம் கண்டமனுார் பகுதியில் அதிகளவு நாட்டுத்தக்காளி சாகுபடி நடக்கிறது. இங்கும் விளைச்சல் குறைவால் தக்காளி வரத்து குறைந்தது.

நேற்று ராமநாதபுரத்தில் கிலோ 85 முதல் 90 ரூபாய் வரையிலும், சில்லரை கடைகளில் 100 ரூபாய் வரையும் விற்றது.
இதுகுறித்து ராமநாதபுரம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உரிமையாளர் பாலா கூறுகையில், விலை ஏற்றம் தொடரும். விளைச்சல் குறைவால் இன்னும் இரண்டு நாட்களில் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படலாம், என்றார். சின்ன வெங்காயம் கிலோ 150 வரை விற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 80 ரூபாயாக குறைந்துள்ளது.

Leave a Response