நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி. இவர் தமிழில் ‘போடா போடி’ படம் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஒரு நாடகத்தில் நடிக்கவுள்ளார்.
இது பற்றி கூறிய வரலட்சுமி, ‘‘சினிமாவில் நடனம் ஆடும்போதோ, நடிக்கும்போதோ தவறு நடந்தால் ரீடேக் எடுக்கலாம். ஆனால் மேடை நாடங்களில் நடிப்புக்கும், நடனத்துக்கும் ஒரே டேக்தான். ‘ரோமியோ ஜூலியட்’ என்னும் இசை நாடகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒப்புதலுக்கு பிறகு அவரது பாடல்களுக்கு இந்த இசை நாடகத்தில் நடனம் நடக்கிறது. என்னுடன் சல்சா மனோ நடனம் ஆடுகிறார். நாடகத்தை ஜெப்ரி வரதன் இயக்குகிறார். இந்நிகழ்ச்சி சென்னையில் ஜூலை 8, 9 தேதிகளில் நடக்கிறது என தெரிவித்தார்.