ஜூலையில் வெளியாகும் ‘மாயவன்’

maayavan 2
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால், நீண்ட நாட்களாக அப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் மற்றும் அபி & அபி நிறுவனம் இணைந்து வெளியிடவுள்ளார்கள்.

‘மாயவன்’ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘4ஜி’ படத்தை தயாரித்து வருகிறார் சி.வி.குமார். அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Response