சில தினங்களுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த திரைப்படம் “மரகத நாணயம்”. இப்படத்தில் ஆதி நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராமதாஸ் (முனீஸ் காந்த்), பாடகர் அருண்ராஜா காமராஜ், டேனி, மைம் கோபி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை A.R.K.சரவணன் இயக்க, ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக டில்லிபாபு தயாரித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு முன்பாகவே, திரைதுரையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பிரித்யேக காட்சி திரையிடப்பட்டது. அந்த காட்சிகளில் பார்வையாளர்களிடம் “மரகத நாணயம்” திரைப்படம் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.
இந்த காட்சிகளின் பாராட்டுக்கள் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே திரையரங்க மற்றும் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. உலகெங்கும் சுமார் 578 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இப்படத்தில் நிக்கி கல்ராணி குரல் மற்றும் அவருடைய உடல் மொழி(பாடி லாங்குவேஜ்) ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டுக்கள் மற்றும் கைதட்டல்களை பெற்றுள்ளது. முன்பு நாங்கள் குறிப்பிட்டுள்ள நிக்கி கல்ரானியின் குரல் மற்றும் பாடி லாங்குவேஜை பற்றி ஒரே வரியில் சொல்ல வேன்டும்மென்றால் “நிக்கி கல்ரானிக்கு பயமுமில்லை, கூச்சமுமில்லை! நடிப்பில் வெளுத்து கட்டியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான நடிகைகள், இப்படத்தில் நடித்துள்ள நிக்கி கல்ராணி நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவர். மீறி நடிக்க ஒப்பு கொண்டால், கண்டிஷன்களை போடுவது வழக்கம். ஆனால் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி, எந்த ஒரு கண்டிஷனும் போடாமல் நடித்துள்ளார் நிக்கி கல்ராணி.