பொன்ராம் இயக்கத்தில்: சிவகார்த்திகேயனுடன் இணையும் சிம்ரன்

simr
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிகை சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்.

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்த வணமகன் திரைப்படம் (ஜூன் 23)திரையில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகர் சிவாகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து தற்போது டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இதற்கு முன் இவர்கள் இணைந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”
“ரஜினி முருகன்” ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் குற்றாலத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் காமெடி நடிகர் சூரி, நெப்போலியன் உட்பட பலர் நடிக்கின்றனர். குறிப்பாக படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகை சிம்ரன் நடிக்கிறார்.

Leave a Response