இன்றுமுதல் தமிழில் “புலிமுருகன்”

puli
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் வசூலிலும் மலையாளத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை படைத்தது. ரூ.150 கோடி வரை இப்படம் மலையாளத்தில் வசூல் செய்திருந்தது.

இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் வைஷாக்.

இந்நிலையில், இப்படத்தை அதே பெயரில் தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி முலக்குபாடம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் மொழி பெயர்த்து இன்று திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.

Leave a Response