திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி, உதவித்தொகை வழங்குவதாக அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு…

Sahodari_Family_One
தமிழகச் சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கல்வித்துறை மானியக்கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் திருநங்கைகளுக்கு நலன் பயக்கும் அறிவிப்புகளை வெளியிட்டார்.

கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு மாதம்தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும். அனைத்து படிப்புகளையும் திருநங்கைகள் அங்கு கட்டணம் ஏதும் இல்லாமல் படிக்கலாம்.

என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு திருநங்கைகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Response