தமிழில் நாயகியாக அறிமுகமாகும் Dr. ராஜசேகர் – ஜீவிதாவின் மகள்…

shivaani
இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு “இது தாண்டா போலீஸ்” போன்ற பல வெற்றி படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் Dr. ராஜ சேகர் மற்றும் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஜீவிதாவின் மகள் ஷிவானி ராஜசேகர் ஆவார். ஷிவானி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே அறிமுகம் இருந்திருக்கு. சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம், குச்சிபிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட், கிடார், வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன். நானும் தங்கை ஷிவாத்மிகாவும் யூடியுப் பார்த்து பாடி கொண்டே இருப்போம் இது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. நானும் தங்கையும் கிக் பாக்சிங் படித்து வருகிறோம். எனக்கு பிட்னஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அது எனக்கு ஒரு அடிக்சன் மாதிரி.

நான் பொறந்தது மட்டும் தான் தமிழ் நாடு வளர்ந்தது ஹைதராபாத்தில் தான். உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். அவர்களோடு பேசும் போது தமிழில் தான் பேசுவோம். நான் 3வது வருடம் மருத்துவம் படித்து வருகிறேன். நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த 3 படத்தை பார்த்து எமோஷனல் ஆகி அழுது இருக்கிறேன். விஷாலை எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் மேன்லியாக இருப்பார். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட. நடிகர் விஜய் சேதுபதி செம ஆக்டர். அவரை பிடிக்கும். அவர் நடிக்கும் படம் சென்சிபிலாக இருக்கும்.

அப்பா தான் என்னுடைய ஆள் டைம் ஹீரோ, அப்பா அம்மா சேர்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பார்த்திருக்கிறேன். முதலில் டாக்டர் ஆகிவிட்டு அப்புறம் ஆக்டர் ஆகிவிடுவோம் என்கிறார் ஷிவானி.

Leave a Response