காதல் கலந்த காமெடி படத்தில் நடிக்கும் ரம்யா நம்பீசன்…

Natpuna Ennanu Theriyuma
புதுமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “நட்புனா என்னானு தெரியுமா”. இப்படத்தில் கவின் நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்ராஜா காமராஜ், ராஜு, மொட்ட ராஜேந்திரன், இளவரசு, அழகர் பெருமாள், மன்சூர் அலி கான் என ஒரு நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது.

இப்படம் காதல் மற்றும் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சிவா அரவிந்த் தெரிவித்தார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்துள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்தார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை யுவா மேற்கொள்ள, ஆர்.நிர்மல் படத்தொகுப்பை செய்துள்ளார். படத்தின் இசையை தரன் அமைக்க, சிவா அரவிந்த் இயக்கியுள்ளார். ‘லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்’ சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

“நட்புனா என்னானு தெரியுமா” திரைப்படத்தின் இறுதிகட்ட பனி தற்போது நடந்து வருகிறது.

Leave a Response