பற்கள் கெட்டுப் போவதை தடுக்கனுமா: திராட்சை விதைச் சாறு பயன்படுத்துங்க…

stomatolog
நமது பல்லின் ஈறு பாதுகாப்பை, திராட்சை விதை அதிகரிக்கிறது. அந்த விதைப் பொடியை, சாறாகவும் மாற்றி பயன்படுத்தலாம். அதில் நிறைந்துள்ள ரெசின், பற்களை நீண்ட காலம் பாதுகாக்க உதவுகிறது.

இதனை சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வின் மூலமாக உறுதி செய்துள்ளனர். இன்றைய வாழ்க்கை முறையில், ஈறு கெட்டுப் போதல், பற்கள் சீக்கிரமே உதிர்ந்து விடுதல் உள்ளிட்ட பிரச்னைகளை, 40 வயதிற்கு மேலானவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

அவர்களை பாதுகாக்கும் வகையில், திராட்சை விதையின் சாறு உதவுவதாகவும், அதில் இருந்து கிடைக்கும் தனித்துவமான புரதச்சத்து, பற்களை பாதுகாக்கத் தேவையான பங்களிப்பை வழங்குகிறது என்றும், அந்த ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.

பற்பசை, நோய் கிருமி நீக்கிகளை பயன்படுத்துவதைவிட, திராட்சை சாறை, அன்றாடம் பற்களிலும், ஈறுகளிலும் தேய்த்துவர நீடித்த பலன் கிடைப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், திராட்சை விதை சாறில் இருந்து டென்டின் என்ற புரதச்சத்தை தயாரித்து, அதனை ஈறுகளில் ஏற்படும் விரிசலில் அடைப்பதன் மூலமாக, பற்களை பாதுகாக்க முடியும் என்றும் ஆய்வை நடத்திய பேராசிரியர்கள் குழு கூறியுள்ளது.

Leave a Response