முழுக்க முழுக்க கொடைக்கானலின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் “உரு”…

uru
கலையரசன் தன்ஷிகா நடிதிதுள்ள படம் ‘உரு’. படத்தின் அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த். இதற்குமுன் இயக்குனர் கல்யாணிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ‘உரு’ படம் வருகிற 16 தேதி திரைக்கு வருகிறது.படத்தை ‘வையம் மீடியா’ நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரிக்கிறார்.

படம் குறித்து பேசும்போது:- “உரு படம் ‘சைக்காலஜிக்கல் திர்லர் கதையாக உருவாகியுள்ளது. இது ஒரு,உரு தெரியாத ஒரு மனிதன் பற்றிய படம்! படத்தை முழுக்க முழுக்க கொடைக்கானலின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.இப்படம் கொடைக்கானலில் 40 நாட்கள் இரவில் கடும் குளிரின் காட்சிகள் படமாக்க பட்டது. அது மிகவும் சவாலான விஷயமாக இருந்தது.கலையரசன், தன்ஷிகா,மைம்’கோபி என பலரும் நடித்துள்ளனர்.

படத்தில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள் எல்லோரும் ரொம்பவும் கஷ்ட்டப்பட்டோம். அந்த கஷ்ட்டம் எல்லாம் மறந்து போகும் விதமாக “உரு” ஒரு நல்ல படமாக வந்துள்ளது’ என்றார் இயக்குனர் விக்கி ஆனந்த்

பிச்சைக்காரன் பட ஒலிபதிவாளர் பிரசன்னா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஆண்டனி கவனித்துள்ளார். ‘மெட்ரோ’ படத்திற்கு இசை அமைத்த ஜோஹன் இப்படத்தில் இசை அமைத்துள்ளார்.

Leave a Response