மத்திய அரசின் புதிய திட்டம் : சிலிண்டர் புக் செய்ய இனி “வாட்ஸ் ஆப் ” போதும்…

what
எல்லாரும் வீட்டுலயும் உள்ள அத்தியாய தேவைகளில் ஒன்று கியாஸ் சிலிண்டர். இதை புக் செய்ய நாம் கால் பண்ண வேண்டியது ஒரு சிறிய விஷயம் தான், இருந்தாலும் அதை சோம்பேறி தனத்தால் அப்புறம் என்று சொல்லி தள்ளி போடுவோம். இறுதியில் மறந்து விடுவோம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒரு திட்டம் வந்துள்ளது. அது என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப , பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது, இனி கியாஸ் சிலின்டர் பதிவு செய்ய வாட்ஸ் ஆப் ஒன்றே போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது . இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் கியாஸ் சிலிண்டரை புக் செய்யும் வசதி, முதலில் உத்திர பிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்படும் எனவும், பின்னர் படிப்படியாக மற்ற மாநிலங்களில் அமல் படுத்தப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், உண்மையில் மக்களுக்கு மிகவும் எளிதாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது .

Leave a Response