சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாதவைகள்…

sakarai
சர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதில் முக்கியம் சாப்பிட கூடாதவையை முற்றிலும் அகற்றனும். அவை என்னனு வாங்க தெரிஞ்சிப்போம்.

சாப்பிடக்கூடாதவை:

வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே விளைவதையும் தவிர்க்கவேண்டும்

சாப்பிடக்கூடாத பழங்கள் :

பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள்,பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா., சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அருந்தக் கூடாத பானங்கள் :

சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு,வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

Leave a Response