அபராதமா எதுக்கு…..

lachcham
வருமானவரித்துறையினர் புதியதாக அறிவிப்பு அறிவித்துள்ளனர். என்னவென்றால் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து முழுமையாக 2 லட்ச ரூபாய் ரொக்கமாக எடுத்தால்,100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து, அனைவரும் வங்கிக் கணக்குகளும், பணப்பரிமாற்றங்களும் வருமான வரித்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு இயற்றப்பட்டுள்ள நிதிச் சட்டத்தின் கீழ், 2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை வங்கியிலிருந்து எடுப்பவர்களுக்கு, அவர்கள் எடுக்கும் தொகையின் அளவில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. இந்த புதிய விதிமுறை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி ஒருவர் 2 லட்சம் பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிறார் எனில், அவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். ஆனால் இந்த விதிமுறையானது, தனி நபர் தனது சொந்த செலவுகளுக்காக பணம் எடுக்கப்படும் போது மட்டுமே பொருந்தும்.

அதே நேரத்தில் அரசு, நிதி நிறுவனம், தபால் நிலைய சேமிப்புக் கணக்கு அல்லது கூட்டுறவு வங்கி ஆகியவற்றிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

Leave a Response