சீமான் இயக்கத்தில் நடிக்க விருக்கும் ஜிவி பிரகாஷ்…

seeman
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான். இவர் தற்பொழுது மறுபடியும் படம் இயக்க உள்ளார்.

அதாவது கோபம் என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை இயக்கும் சீமான், இதற்கான கதையை ஜி.வி. பிரகாஷிடம் கூறியுள்ளார். உடனே அவரும் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் சீமான், ஜி.வி ஆகிய இருவரும் கைகோர்ப்பதால் தமிழ்நாட்டுப் பிரச்னைகளை உள்ளடக்கிய கதையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008-ல் வாழ்த்துகள் படத்தை இயக்கிய சீமான் அதன்பிறகு அரசியல் களத்தில் தீவிரமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குக்குப் பிறகு அவர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது.

Leave a Response