இயக்குனர் ராஜேஷுக்கு வாய்ப்பு கொடுத்த தில்லுக்கு துட்டு படத்தின் கதாநாயகன்…

santhaanam
தமிழ் திரையுலகில் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் எம்.ராஜேஷ் கடந்த சில ஆண்டுகளாக எந்த வெற்றிப் படத்தையும் கொடுக்கவில்லை. அவர் கடைசியாக இயக்கி வெளியான ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படு தோல்வியடைந்தது. இந்நிலையில் ராஜேஷின் சினிமா எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில் தன்னை இந்நிலைமையில் இருந்து தூக்கிவிடும் திறமை அந்த ஒருவருக்குத்தான் உண்டு என நினைத்து நடிகர் சந்தானத்திடம் சரணடைந்தார். இவரது நிலைமையை கண்ட நடிகர் சந்தானம் அவரது படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது. இதுவரை நடிகர் சந்தானம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் காமெடியனாக நடித்து வந்தார். முதல்முறையாக அவருடைய இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் சந்தானம்.

இதுகுறித்து ராஜேஷ் கூறியபோது, ‘சந்தானத்தின் இப்போதைய டிரண்டுக்கு ஏற்றவாறு இந்த படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன். எந்த மாதிரியானவற்றை என்னிடம் எதிர்பார்ப்பார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அவர் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்வேன். இதுவரை என்னுடைய படத்தில் காமெடியனாக அவர் நடித்துள்ளார். முதல்முறையாக சந்தானம் என் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்’’ என்றார் இயக்குனர் ராஜேஷ்.

Leave a Response