“மை பிக் பாதர்” தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது…

my
நம்ம தமிழ் சினிமா துறையில் ஏற்கனவே வேறு மொழியில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள் நம் இயக்குனர்கள். இவ்வாறு இயக்கும் படங்கள் தோல்வி அடையும் சில படங்கள் எதிர்பாராத வெற்றி பெரும். அவ்விதத்தில் தற்பொழுது தமிழ் ரீமேக் வரவிருக்கு அது என்னனு வாங்க படிப்போம்.

கடந்த 2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் மை பிக் பாதர். உயரம் குறைவான காமெடி நடிகர் பக்ருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். உயரம் குறைவாக உள்ள தந்தைக்கும், சராசரி உயரம் கொண்ட மகனுக்கும் இடையிலான உணர்வுகளை சொல்லும் படம். இதில் தந்தையாக பக்ரு நடித்தார். மகனாக ஜெயராம் நடித்தார். ஜெயராம் ஜோடியாக கனிகா நடித்தார். மகேஷ் பி.ஸ்ரீனிவாசன் இயக்கினார். அலெக்ஸ் பால் இசை அமைத்தார். விபின் மோகன் ஒளிப்பதிவு செய்தார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை அதன் இயக்குனர் மகேஷ் பி.ஸ்ரீனிவாசனே, தமிழில் ரீமேக் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பக்ரு நடித்த கேரக்டரில் இங்குள்ள குள்ளமணி உள்ளிட்ட சில நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு காமெடி இமேஜ் மட்டுமே இருக்கிறது. ஆனால் பக்ரு குணசித்ர நடிகராகவும் தமிழ் நாட்டில் அறியப்பட்டிருக்கிறார் இதனால் அவரையே நடிக்க வைக்கிறார்கள். ஜெயராம் கேரக்டரில் நடிக்க முன்னணி இளம் நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷ் அல்லது விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று தெரிகிறது.

Leave a Response