விஷாலுடன் நடிக்க விருக்கும் வரலட்சுமி…

vishal
விஷால், வரலட்சுமி இருவரும் ஒருவற்கு ஒருவர் காதலித்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. பின்பு நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் வரலட்சுமியின் தந்தை சரத்குமாரை எதிர்த்து விஷால் போட்டியிட வரலட்சுமி தந்தைக்கு ஆதரவு தர இது தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஷாலோடு எப்போதும் முறைத்துக் கொண்டு திரிகிற அவரது முறைப்பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்போதுள்ள சூழ்நிலையில் இருவரையும் இணைந்து நடிக்க வைத்தால் அது படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியை கொடுக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம். இதற்கு விஷால், வரலட்சுமி இருவருமே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வரலட்சுமி தற்போது அருண் வைத்தியநாதனின் நிபுணன், ஆர்.கே.சுரேசுடன் வர்க்கம், சிபிராஜுடன் சத்யா, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Response