“சங்கிலி புங்கிலி கதவ தொற” திரைவிமர்சனம்…

soori
“சங்கிலி புங்கிலி கதவ தொற” இப்படத்தில் கதாநாயகனா ஜீவா மற்றும் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா. இவர்களுடன் ராதா ரவி, ராதிகா சரத்குமார், சூரி, கோவை சரளா, தம்பி ராமையா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க விஷால் சந்திரா சேகர் இசை அமைத்துள்ளார். இப்படத்தை நம்ம அட்லி தான் தாயரித்து இருக்கிறார் அவருடைய சொந்த நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்தை இயக்குனர் ஐக் அவர்கள் இயக்கியுள்ளார்.

இப்படத்தை பத்தி சொல்லணும் அப்படினா ஒன்னும் இல்ல அரைச்ச மாவை தான் அறைக்குறாங்க.
எல்லாம் படத்துல காட்டுற மாதிரி பேய் படம்னா மொத்தமா ஒரு வீட்டுல மாட்டிக்குறாங்க. அந்த வீட்டுல ஆவி இருக்கு. அப்புறம் அந்த ஆவிக்கு ஒரு மொக்க கதை அப்புறம் என்ன நடக்குது இதா படம் கதை. மொத்தத்துல படத்தோட மையக் கரு என்னனா ஒரு இளைஞர் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பத்தை சொந்த வீட்டிற்கு மாறுவதற்கு செய்யும் தில்லாலங்கடி அப்புறம் என்ன நடுக்குது இதான் கதை. ஆனால் இப்படத்தின் இயக்குனர் ஐக் பாராட்டியே ஆக வேண்டும் குடும்பத்தின் முக்கியதுவத்தை நன்றாக கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில் ஜீவா நடிப்பு போதிய அளவில்லை. ஸ்ரீதிவ்யா அங்க அங்க நடிப்பில் பின்னி இருக்காங்க. சூரி காமெடி மனசை ஆறுதல் படுத்தும். விஷால் சந்திரா சேகர் பத்தி சொல்லியே ஆகனும் இவர் பின்னணியில் பிச்சி உதறியுள்ளார். ஆக மொத்தத்தில் இப்படத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பு இன்றி குடும்பத்துடன் சென்று ஒரு வாட்டி பார்க்கலாம்.

Leave a Response