மீண்டும் உருவெடுத்த ‘தமிழ் திரைப்பட வர்த்தக சபை’! காரணம் என்ன?

TFCC
சென்னையை தலைமையகமாக கொண்டு தென்னகத்தின் நான்கு மொழி திரைப்பட சங்கங்களின் சார்பாக ‘தென்னிந்தியா திரைப்பட வர்த்தக சபை” என்று 1938’ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் தெலுங்கு திரைத்துறையினர் ஆந்திராவில் ‘தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை’, மலையாள திரைத்துறையினர் கேரளாவில் ‘மலையாள திரைப்பட வர்த்தக சபை’, கன்னட திரைத்துறையினர் கர்நாடகாவில் ‘கன்னட திரைப்பட வர்த்தக சபை’, தமிழ் திரைத்துறையினர் சென்னையில் “தமிழ் திரைப்பட வர்த்தக சபை’ என்று அவரவர் மொழிகளுக்கென தனி தனி வர்த்தக சபைகளை ஆரம்பித்தனர். தமிழ் திரைப்பட வர்த்தக சபையை தவிர மற்ற மொழி வர்த்தக சபைகள் மமுழுமூச்சோடு செயல்பட்டு வருகின்றன. தமிழ் திரைத்துறையினர் மட்டும் தென்னிந்தியா திரைப்பட வர்த்தக சபையோடு செயல்பட்டு வந்தது.

சில வாரங்களுக்கு முன்பு “தென்னிந்தியா திரைப்பட வர்த்தக சபை” அவர்களுக்கான தேர்தலை நடத்தியது. அந்த தேர்தலில் நான்கு அணிகள் போட்டியிட்டன. போட்டியிட்ட நான்கு அணிகளில் மூன்று அணிகள் தேர்தலில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டி வெளியேறின. இது ஒரு புறம்மிருக்க, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் திருட்டு வி.சி.டி ஒழிப்பு மற்றும் சில கோரிக்கைகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு முன்வைத்தனர். அந்த கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் மே 30’ம் தேதிக்கு மேல் திரைத்துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் செல்வார்கள் என சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அதன் தலைவர் விஷால் தெரிவித்தார்.

விஷாலின் அப்போதைய அறிவிப்புக்கு சில எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் பல படங்கள் பாகுபலி வெற்றியின் காரணமாக சில நாட்களுக்கு, வாரங்களுக்கு அவர்களுடைய படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தினால் இந்த படங்களின் ரிலீஸை தள்ளி வைக்கும் படி தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தயாரிப்பாளர்களோ அவர்களுடைய கஷ்ட நஷ்டத்தை விளக்கியுள்ளதாகவும் அதை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், சில தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் கருத்து வேறுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ‘அபிராமி’ ராமநாதன், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம், முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஆர்.செல்வின்ராஜ், செயலாளர் ராஜமன்னார், சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் அருள்பதி, பிரபல திரைப்பட பைநான்சர் மதுரை அன்பு ஆகியோர் இணைந்து முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த “தமிழ் திரைப்பட வர்த்தக சபை” என்ற அமைப்பை மீண்டும் புதுபித்துள்ளனர். இவர்கள், ‘அபிராமி’ ராமநாதனை இந்த சங்கத்தின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்த்தேடுத்துள்ளனர்.

Leave a Response