சென்ற காங்கிரஸ் ஆட்சியில் மாறன் சகோதர்கள் மற்றும் ஏர்செல்-மாக்சிஸ் இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சட்டத்துக்கு புறம்பாக சில தவறுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தனா. இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டு சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம் பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது.
இன்று காலை சுமார் 6:30 மணி முதல் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட சுமார் 16 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் அவர்களின் சென்னை வீடுகள், அலுவலகங்கள், காரைக்குடியில் உள்ள அவர்களுடைய வீடுகள் மற்றும் சில இடங்களில் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது.
சோதனையில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள், இந்த சோதனை பற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சி.பி.ஐ சோதனையில் என்ன நடந்தது, எதாவது முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதா என்பதை அதிகாரிகள் தேர்வித்தால் தான் உண்மை தெரிய வரும்.
தற்போது நடந்து வரும் சி.பி.ஐ சோதனை பற்றி இதுவரை காங்கிரஸார் எவரும் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.