அனிருத் கைவசம் இவ்வருடம் 4 படங்கள்…

aniru
நம்ம ஊரு இளைஞர்கள் ஏற்றவாறு இசையமைத்து அவர்கள் மனதை கைப்பற்றி வைத்தவர் என்றால் அது அனிருத் சாரும். ஆனால் அவர் எபொழுது பீப் பாடல் விவகாரத்தில் சிக்கினாரோ அப்பொழுதில் இருந்து அவர் படம் இசையமைப்பு குறைந்தது.

இந்நிலையில் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது. தற்போது இவரது இசையில் அஜீத்தின் ‘விவேகம்’ படம் தயாராகி இருக்கிறது. இப்பட பாடல்கள் வேறு லெவலில் இருக்கும் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது அனிருத் இசையில் இந்தாண்டு மட்டும் நான்கு படங்கள் வெளியாகவுள்ளது. அஜீத்தின் ‘விவேகம்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ஒரு படம். இந்த தகவலை அனிருத் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

ஆகமொத்தத்தில் இவ்வருடம் அனிருத் எல்லாம் மனதையும் இசையால் கொள்ளை கொல்ல போறார் என்பது உறுதி.

Leave a Response