2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கவுள்ள பம்பாய் பட கதாநாயகி…!

Manisha
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. பாலிவுட் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலமானவர் தான். ஆனால் இவரது சொந்த வாழ்க்கை சோகமானது. திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்காமல் விவாகரத்து வரை சென்றது.

தொடர்ந்து புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், பின்னர் அதிலிருந்து மீண்டார். இப்போது எல்லாப் பிரச்னைகளையும் கடந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். தற்போது அவர் ‘டியர் மாயா’ என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ளது. இதனிடையே மனீஷா, இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க உள்ளார்.

இதுகுறித்து மனீஷா கூறுகையில், சட்ட ரீதியாக இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தாய் ஆகலாம் என்று எண்ணியுள்ளேன். இந்தாண்டு இறுதிக்குள் அல்லது 2018-ல் குழந்தைகளை தத்தெடுத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

Leave a Response