ஐடி வேலையில் ஆப்பு…..

it
இன்று நம் நாட்டில் ஐடி கம்பெனி என்றால் பெரிய அரசு வேலை போன்று ஆகிவிட்டது. அந்த
வேலைக்கு வரவிருக்கும் ஆப்பு ஒன்று வரவிற்கு.

அது என்ன வென்றால் உலகம் முழுவதும் 150 மில்லியன் டாலர் மதிப்பில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்பத்துறை சமீப காலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் நஷ்டத்தை தவிர்க்க வயதான ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை பல நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் 2008 முதல் 2010 வரை பணியில் சேர்ந்த தொழிலாளர்களை எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்ய ஐடி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. காக்னிஸன்ட் நிறுவனத்தில் மட்டும் சுமார் 6000 ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் என்று தெரிகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1000 பேர் வேலையை இழக்க வாய்ப்பிருக்கிறது. மேலதிகாரிகளின் அறிக்கையைப் பெற்று இந்த 1000 பேரும் தேர்வுசெய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

விப்ரோ நிறுவனமும் 10 சதவீதம் ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் சீட்டைக் கிழிக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

பணி அனுபவம் மிக்கவர்களான மூத்த ஊழியர்களுக்கு இவ்வாறு ஆப்பு வைக்க திட்டம் தீட்டியுள்ள நிறுவனங்கள், நடப்பு ஆண்டின் முடிவில் இளம் ஊழியர்களையும் வடிகட்டி விரட்டும் திட்டத்துடன் இருக்கின்றனவாம்!

Leave a Response