அழுகிய நிலை: பெண்ணின் சடலம் மீட்பு….

wardrobe
நமது நாட்டில் கொலை கொள்ளைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையெல்லாம் வைத்து பார்த்தால் பயம்தான் வருகிறது. இந்நிலையில் இன்று பெங்களூரில் பூட்டி இருந்த வீட்டிற்குள் உள்ள அலமாரியில் சடலம் ஒன்று போலீசாரால் மீட்பு.

அதாவது கெங்கேரி சாட்டிலைட் டவுன் அருகே காந்திநகர் பகுதியில் வீட்டின் உரிமையாளர் நவீன்(35), தனது வீட்டின் கீழ் தளத்தை கடந்த ஆண்டு மே மாதம் பொறியியல் பட்டதாரிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அவரது தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வீடு பூட்டியே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு இடையில் தான் வீட்டை காலி செய்வதாகக் கூறிய கல்லூரி மாணவன் முன்பணமாக செலுத்திய ரூ.1 லட்சத்தில் பாதி பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொண்டதாக நவீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் ஓராண்டு வாடகை ஒப்பந்தம் நிறைவுற்றபின் வீட்டை திறந்து பார்த்தபோது, அலமாரிக்கு சிவப்பு பெயிண்ட் அடித்திருந்ததையும் சில சிமெண்ட் பூச்சு வேலை நடந்திருப்பதையும் கண்டு சந்தேகப்பட்ட நவீன் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நவீனின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அலமாரியை உடைத்து பார்த்தபோது அதில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். பின்னர் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த கெங்கேரி காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டை காலி செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே கல்லூரி மாணவனின் பாட்டி வீட்டில் காணப்படவில்லை. இது குறித்து கேட்டபோது, அவர் உறவினர் வீட்டில் இருப்பதாக கூறி மாணவன் சமாளித்ததாக நவீன் கூறியுள்ளார். தற்போது கல்லூரி மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Response