என் ஆலோடா செருப்பை காணோம்-திரைவிமர்சனம்

IMG-20170507-WA0002
சமீப காலமாக படங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில், ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது.

‘கெணத்தைக் காணோம்’ எனக் கூப்பாடு போட்டு இன்ஸ்பெக்டரையே வேலையை விட்டுப் போக வைத்த வடிவேலு, ‘கட்டப்பாவைக் காணோம்’ என வில்லத்தனம் காட்டிய சிபிராஜுக்கு அடுத்து ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என ரகளையான டைட்டில் வைத்து ரசிகர்களை அலற வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்நாத். ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ படங்களின் இயக்குநர்.

படம் பார்த்தால் எப்படி இருக்கும் என, யோசித்து பாருங்கள். இதில், ஆனந்திக்கு ஜோடியாக நடித்திருப்பது, ‘பசங்க3 படத்தில் நடித்த பாண்டி. இந்த படத்துக்காக, பாண்டி, தமிழ் என, தன் பெயரை மாற்றியுள்ளார்.

கயல்’ ஆனந்தியோட செருப்பு காணாமப் போய்டுது. அது வெறும் செருப்புதானே அதுக்கு ஏன் இம்புட்டு ஃபீலிங்க்ஸ்னு நாம சும்மா போக முடியாது. ஏன்னா அதுக்குப் பின்னாடி ஒரு வலுவான காரணம் இருக்கு. அப்படியான வரலாற்றைக் கொண்ட செருப்பை நாயகன் தமிழ் கண்டுபிடிக்கத் தேடுறார். அதுதான் கதை. செருப்புங்கிறதை காலில் அணிகிற ஒரு அருவருப்பான பொருளாக நீங்கள் உணரமுடியாது. அந்தச் செருப்புக்குள்ள ஒரு எமோஷனல் ஃபீலிங் இருக்கு. ஒரு பேனா மூடி தொலைஞ்சு போய்ட்டா மூடி இல்லாமயே அந்தப் பேனாவைப் பயன்படுத்தலாம். ஆனால், நீங்க போட்டிருக்கிறதுல ஒரு செருப்பு தொலைஞ்சு போய்ட்டாலும் இன்னொண்ணையும் பயன்படுத்தவே முடியாது. ஜோடியா இருந்தாதான் செருப்புக்குச் சிறப்பு.

எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது நம்மளோட செருப்பைத் தொலைச்சிருப்போம். தொலைஞ்ச செருப்புக்காக ஃபீல் பண்ணியிருப்போம். இந்த டைட்டிலில் அதை ஒவ்வொரு மனுசனும் தங்களோட வாழ்க்கை அனுபவங்களோடு கனெக்ட் பண்ணிக்க முடியும். பழைய செருப்புதானேனு கடந்துபோகவிடாம ஏதோ ஒண்ணு உங்களை இழுத்துப் பிடிக்கும் பாருங்க… அதைச் சொல்றதுதான் இந்தப் படம்.

Leave a Response