அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவிக்கு சம்மன்…..

vijaybaskar
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 8ஆம் தேதி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா வீடு உள்ளிட்ட 72 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதுகுறித்து முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response